Jaffna tamil tv news today 30.11.2024***

Jaffna tamil tv news today 30.11.2024***

JAFFNA TAMIL TV

55 лет назад

13,090 Просмотров

ராஜித சேனாரத்ன, மொஹமட் ரூமி குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை

இலங்கைக் கொடியுடன் அரபிக்கடலில் 2 படகுகள் பிடிப்பு

வெள்ளைக் கொடிகள் கட்டி துக்கம், நாட்டை சோகத்தில் ஆழத்திய மத்ரசா மாணவர்கள் மரணம்

முஸ்லிம்களுக்கான அரசியல் அந்தஸ்தை மறுக்கிறதா அநுரவின் NPP அரசாங்கம்..?

கிளிநொச்சியில் இரவு இளம்பெண்ணிடம் கை வைத்த ஒருவன் பிடிபட்டது எப்படி?
வவுனதீவு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து பிரச்சனை சம்மந்தமாக வலையிறவு பாலத்தினூடாக போக்குவரத்தினை மோற்கொள்வதற்கு பிரதேச சபை செயலாளரை தொடர்பு கொண்டு உழவு இயந்தியரத்தினூடாக மக்கள் போக்குவரத்தினை துரிதபடுத்தி கொடுத்தேன்.

" பொலிஸ் அதிகாரம், நிதியம் அமைக்கும் அதிகாரம் உட்பட மாகாணசபைகளுக்கு இதுவரை வழங்கப்படாத அதிகாரங்களை வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அதனை தடுப்பதற்கு முன்னின்று செயற்படுவோம்."

நாவலப்பிட்டிய - தொளஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு, மரங்கள் சகிதம் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து தடைபட்டது. மண்மேட்டை அகற்றிய, போக்குவரத்து வசதிகளை செய்துகொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மேற்படி வீதியின் வெளிகொடவத்தை பகுதியில் இன்று (29) அதிகாலை 2.00 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இன்றைய (30.11.2024) நாணய மாற்று விகிதம்


கடும் காற்று காரணமாக நமுனுகுலை 16 வது மைல் கல்லுக்கு அருகில் நேற்று பாரிய சைப்பிரஸ் மரங்களும் கற்களும் வீதியில் விழுந்தமையினால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
எனினும், இன்று காலை முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் , பதுளை எலதலுவ பகுதியில் முகாமிட்டுள்ள இராணுவத்தினரும்,ஊர் பொதுமக்களும் இணைந்து மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கற்களையும் மரங்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு வழியமைத்தனர்.

இருப்பினும் சாரதிகள் மிகவும் அவதானதுத்துடன் அவ்விடத்தில் வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுக்கின்றனர்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட தமிழரும் மலேசிய செல்வந்தருமான ஆனந்த கிருஷ்ணன், தனது 86ஆவது வயதில் காலமானார்.

உலகின் 100 பணக்காரர்களில் ஒருவரான இவர், மலேசியாவில் இயங்கும் பெரிய நிறுவனங்களின் அதிபதியாவார்.

மலேசியாவின் அடையாளமாக திகழும் பாரிய வர்த்தக கட்டிடமான இரட்டை கோபுரமான பெட்ரோனஸ் டவர்ஸ் சொந்தக்காரர் ஆனந்த கிருஷ்ணன்.

அத்துடன், மலேசியாவின் இரண்டாவது பெரிய தொலைபேசி நிறுவனமான Maxis Bhd இவருக்குச் சொந்தமானது.

Astro Malaysia Holdings Bhd தனியார் ஊடக நிறுவனத்தை அவர் தோற்றுவித்தார்.

இவரது பெற்றோர்கள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். மனைவி தாய்லாந்து நாட்டவர்.

மலேசியாவில் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் தொடக்கக் கல்வியைத் தொடங்கியவர். பின்னர் கோலாலம்பூர் விக்டோரியா கல்வி நிலையத்தில் படித்தார். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

ஆனந்த கிருஷ்ணனுக்கு அவருக்கு 3 பிள்ளைகள். இரண்டு மகள்கள். அவருடைய ஒரே மகன் வென் அஜான் ஸ்ரீபன்யோ (Ven Ajahn Siripanyo) தாய்லாந்தில் புத்தப் பிக்குவாக இருக்கிறார்.

மட்டக்களப்பு போரதீவு பத்திரகாளி அம்மன் கோவிலினால் 20 லட்சம் பெறுமதியான 9000kg அரிசி இடம்பெயர்ந்த மக்களுக்காக..

பாராட்டுக்கள் கோயில் நிர்வாகத்திற்கு

மட்டக்களப்பு ஊரணி, திருமலை வீதியில் காணப்பட்ட நீர் தற்போது வடிந்துள்ளதனால் அந்த வழியில் தற்போது வாகனங்கள் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை புத்தளம் பெரிய பள்ளி மற்றும் சிவில் சமூக அமைப்பு இணைந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கடையாகுளம், மணல் குன்று, தம்பபன்னி, சீமாவளி, வெட்டாளை பகுதி, தில்லையடி, பாலாவி மற்றும் கரைத்தீவு பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 2025 குடும்பங்களுக்கான 10125 தனி நபர்களுக்கான பகல் உணவுகள் அந்த அந்த மஸ்ஜித் நிர்வாகிகளின் கரங்களிலும் சில பன்சலை,சேர்ஜ் மற்றும் கோயில் நிர்வாகிகளின் கரங்களிலும் 27.11.2024 புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்.

இந்த உயரிய பணிகளில் பணமாகவும் பொருளாகவும் சரீர உதவியாகவும் செய்த அனைவரையும் அல்லாஹூதாஆலா கபூல் செய்வானாக அவர்களின் வாழ்க்கையில் பரகத் செய்வானாக.

சமூக சேவை உபக்குழ
தலைவர்
அஷ்ஷேக் ஸனூஸ் அஷ்ரபீ
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: