அமைதிப் புறாவே அமைதிப் புறாவே அழைக்கின்றேன் உன்னை . . . ஓர் இனிமையான திரையிசைப் பாடல்
Amaithi purave amaithi purave azhaikindren unnai
படம்: தாயே உனக்காக (1966)
குரல்: பி. சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: கே. வி. மகாதேவன்
அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே நான்
நேசிக்கின்றேன் உன்னை
அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை
காலங்களாலே தென்றல் வருக
புயலே வர வேண்டாம்
மேகங்களாலே மழையே வருக
வெள்ளம் வர வேண்டாம்
வீடுகள் தோறும் ஒளியே வருக
இருளே வர வேண்டாம்
நாடுகள் தோறும் உறவே வருக
பகையே வர வேண்டாம்
சமாதானமே சமாதானமே
தழுவுகின்றேன் உன்னை
தர்மதேவனே தர்மதேவனே
சரணடைந்தேன் உன்னை
அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை
புத்தரின் வழியில் அசோகன் சேவை
புரிந்தது எதற்காக
புன்னகை முகமே தேவனின் வீடென
சொன்னது எதற்காக
சத்திய நெறியை தாரணியெங்கும்
தந்தது எதற்காக
சமாதானமாம் சமாதானமாம்
தாயே உனக்காக
அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே நான்
நேசிக்கின்றேன் உன்னை
அமைதிப் புறாவே அமைதிப் புறாவே
அழைக்கின்றேன் உன்னை